Screen Reader Access     A-AA+
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004, சென்னை .
Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000001]
×
Temple History

தல வரலாறு

திருக்கோயில் தலவரலாறு : 1.உமையம்மையார் மயிலுருக்கொண்டு காபலீசுவரரைப் பூசித்த தலம். 2.முருகப் பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். 3.நான்முகன் பூசை புரிந்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்ட தலம். 4.நான்மறைகள் பூசித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்றது. 5.சுக்கிரன் பூசித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற பெருந்தலம். 6.இராமபிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய நற்றலம். 7.திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்த்தலம். 8.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் நாயனார் தோன்றி வழுத்திய தலம். 9.பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத்தலம். 10.ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற தெய்வத்தலம். 11.சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்றதலம். 12.வான் புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்.

தல பெருமை

தல புராணம்: மயிலாப்பூர் என்ற பெயர் இறைவி உமாதேவியார் மயில் உருவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தல புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. திருக்கோயில் சன்னதியில் உள்ள தல விருட்சத்தின் அடியில் இத்தல புராணக் காட்சி கல்லில் செதுக்கப்பட்டுள்ளதைக் காண முடியும். உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டியதையடுத்து, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய் என சாபமிட்டார். சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய் எனக் கூறினார். திருக்கோயிலில் உள்ள புன்னை மரத்தடியில் உமையம்மையார் மயிலுருக்கொண்டு சிவலிங்கத்தை வணங்கினார்....

இலக்கிய பின்புலம்

இலக்கிய பின்புலம்: திருமயிலைப் பற்றியும் கபாலீசுவரரைப் பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேச செட்டியார் மகள் அங்கம்பூம்பாவை அரவம் (பாம்பு) தீண்டி இறந்தபின் திருமயிலை வந்திருந்த திருஞானசம்பந்தர் இறந்துபோன பூம்பாவையினுடைய அஸ்தியை (எலும்புகுடத்தை) கொண்டு வரச் செய்து இறைவனை நினைத்து தேவாரத்தமிழ்ப் பாடல்கள் மூலம் பூம்பாவையை மீண்டும் உயிர்த்தெழ வைக்கிறார். இவர் பாடிய பதினொரு பாடல்கள் உள்ளன. முதல் பத்து பாடல்களில் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் மயிலை திருத்தலத்திலுள்ள மூர்த்தி பற்றியும், ...