கோயில் விவரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி (கி.பி.90-168) என்பவர் இவ்வூரை மல்லியார்பா எனக் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்களில், இந்நகரம் வணிகம் செழித்து வளர்ந்த நிலையில், மிகவும் புகழ்பெற்ற கடற்கரைப் பட்டினமாக விளங்கியுள்ளது. மேலும் இந்நகரமானது, பண்பாட்டுச் சிறப்பினையும் தன்னகத்தே கொண்டது. உலகப்புகழ்பெற்ற அற இலக்கியமான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் வாழ்ந்தவர். ஏழாம் நூற்றாண்டை சார்ந்த சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தரும் அப்பரும் இத்திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். கி.பி.1566-ல் மயிலாப்பூர் போர்ச்சுகீசியரின் வசம் வீழ்ந்த போது திருக்கோயில் சேதமுற்றது. தற்போதுள்ள திருக்கோயிலானது 300 ஆண்டுகளுக்கு...